ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கு போட்டி போடும் தயாரிப்பு நிறுவனங்கள்...!

sindoor

ஆபரேஷன் சிந்தூர் பெயரை கைப்பற்ற தயாரிப்பு நிறுவனங்கள் இடையே  கடும் போட்டி நிலவுகிறது. 

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானை தாக்கியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காமில் கணவனை இழந்து குங்குமத்தை இழந்ததால் பெண்களின் இழப்புக்கு பழிவாங்கும் விதமாக இந்த ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டது.sindoor

இந்நிலையில் இந்த நடவடிக்கையை மையப்படுத்தி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் படம் எடுக்க பாலிவுட் தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு காப்புரிமை வாங்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. ராணுவ பின்னணியில் படங்களைத் தயாரிக்கும் நார்த் மேக்கர்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு உரிமை கோரி உள்ளது.

இதில் டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், 15 விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, இந்த பெயர் விரைவில் ஒருவருக்கு வழங்கப்படும். முன்னதாக இந்த பெயருக்கு அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது.ஆனால் ராணுவ நடவடிக்கையையும் தேசபக்தியையும் வணிகமயமாக்குவதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை தெரிவித்த 0நிலையில் தனது விண்ணப்பத்தை ரிலையன்ஸ் திரும்பப்பெற்றது.

Share this story