சிவகார்த்திகேயனை நினைத்து பெருமையாக உள்ளது : அமரனுக்கு அனிருத் பாராட்டு

sk

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை  உருவாக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் தீபாவளியன்று(31.010.2024) வெளியான இப்படம் முதல் நாள் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. sk

இந்நிலையில், ‘அமரன்’ படத்தை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், முன்னணி இசையமைப்பாளரான அனிருத் அமரன் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், அமரன் ஒரு சிறந்த சினிமா எனவும், சிவகார்த்திகேயனை நினைத்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள் எனவும்  குறிப்பிட்டுள்ளார். 


 

Share this story