‘பொன்னியின் செல்வன்’ ஒரு சிறு பார்வை – கிளிம்ஸ் வீடியோ வெளியிட்ட படக்குழு.

photo

 கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு தயாரான திரைப்படம், பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவான இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

photo

photo

 படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் PS2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சற்று முன்பு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் படம் குறித்து நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம் ஆகியோர் பேசி உள்ளனர். இதுவரை காணாத ஒன்றை நாம் காணப் போகிறோம் என கார்த்தி பொன்னியின் செல்வன் குறித்து பேசியுள்ளார். மேலும் ஆதித்த கரிகாலன் குறித்தும், அந்த கதாபாத்திரத்தின் காதல் குறித்தும் நடிகர் விக்ரம் பேசியுள்ளார். ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என மன்னர், குடும்பம், மக்கள் தவிப்பதாக தெரிவித்துள்ளார் இந்த வீடியோ காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Share this story