'திரிஷா'விடம் சரணடைந்த 'கார்த்தி' – ‘PS 2’ படத்தின் மாஸ் அப்டேட்.

photo

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதற்காக மாஸ்ஸான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

photo

 மணிரத்தினத்தின் கைவண்ணத்தில் தயாராகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் பொன்னியின் செல்வன் முதல்பாகம்.  கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மைய்யமாக வைத்து உருவான இந்த படத்தில், ராஜராஜ சோழனாக நடிகர் ஜெயம் ரவியும், நந்தினியாக   ஐஸ்வர்யாராயும், குந்தவையாக திரிஷாவும், வந்திய தேவனாக கார்த்தியும், கரிகாலனாக விக்ரமும் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து பல முக்கிய கதாபாத்திரத்தில் பிரபலங்கள்  நடித்திருந்தனர்.

photo

 முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது பாகம் தயாராகியுள்ளது . இந்த திரைப்படம் வரும் ஏப்ரல்28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது ஃபஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதற்காக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தின் முதல் பாடல் மார்ச் 20ஆம் தேதி மாலை 6மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  'அகநக' என்ற அந்த பாடலை இளங்கோ கிருஷணன் எழுதியுள்ளார். பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.


 

Share this story