வெற்றி வாகை சூடிய சோழர்கள்- “பொன்னியின் செல்வன்2” செய்த தரமான சம்பவம்.

photo

பிரமிக்கவைக்கும் படைப்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை மைய்யமாக வைத்து தனக்கே உரித்த பாணியில் இரண்டு பாகங்களாக வெளியிட்டர் மணிரத்தினம். முதல பாகம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இரண்டாம் பாகம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன்2 திரைப்படம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்த ஆண்டு, பாக்ஸ் ஆபிசில் அதிக தொகை வசூலித்த தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2.  இதனை படக்குழு தனது சமூகவலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

photo

புத்தகத்தை படித்த பலரும் படம்குறித்து பல விதமான கருத்துகளை பகிர்ந்தாலும் மணிரத்தினத்தின் படைப்பாக வெளியான இந்த படம் வசூலை வாரி குவித்து வருகிறது. படத்தின் வசனங்கள், கலை இயக்கம், இசை, பாடல்கள் என எதிலும் சமரசம் செய்யாமல் தரமான படப்பை நமக்காக கொடுத்த மணிரத்தினத்தின் முயற்சியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் முதல் பாகம் 500கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படத்த நிலையில் இரண்டாம் பாகம் எவ்வளவு வாசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story