வேகமெடுத்த PS2 பணிகள்- அப்டேட் கொடுத்த சின்ன பழுவேட்டரையர்.

photo

பொன்னியின் செல்வன்1 படத்தை  உலகமே கொண்டாடிய நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்பை எகிறசெய்தது. அந்த வகையில் படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டருடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

photo

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் வேகமெடுத்துள்ளது. அதனை உறுதிபடுத்தும் வகையில் படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்து அசத்திய நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் டப்பில் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து PS2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

photo

அந்த பாகத்தில் பொன்னியின் செல்வருக்கு என்ன நேர்ந்தது, சோழ சாம்ராஜியத்திற்கு எதிரான சதி எப்படி முறியடிக்கப்பட்டது, யார் இந்த மந்தாயினி என்பது மாதிரியான கதைக்களம் காட்டப்பட உள்ளது.

photo

Share this story