விஜய் நடித்த "புதிய கீதை" இயக்குனரின் புதிய படம் -யார் தயாரிக்கிறார் தெரியுமா ?
1762475450000
விஜய் நடித்த புதிய கீதை இயக்குனர் ஜெகன் தன்னுடைய புதிய படத்தை இயக்கி வருகிறார் .இப்படத்தின் அப்டேட் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், மற்றும் பலரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது :
ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம்.
பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் ‘‘வடம்‘‘ படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.
மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது. மேலும், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.