புலிக்குத்தி பாண்டி ஓடிடி தளத்தில் ரிலீஸ்
2012ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் கும்கி. இந்தப்படத்தில் தான் விக்ரம் பிரபு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ளார். யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்துள்ளார். இதைத்தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்த படத்திற்கு முன்பு ‘பேச்சி’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்தப் படத்திற்கு ‘புலிக்குத்தி பாண்டியன்’ என்று பெயர் மாற்றப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகமல் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்நிலையில், புலிக்குத்தி பாண்டி திரைப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.