புனித் ராஜ்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்- 'அப்பு- தி ரியல் ஹீரோ'

punith

கன்னட சூப்பர் ஸ்டாரின் மகனான புனித் ராஜ்குமார் பந்தா இல்லாத  எளிமையான நடத்தையால், ரசிகர்களில் பேரன்பை பெற்று அவர்களின் அப்புவாகவே வாழ்ந்து மறைந்துள்ளார். புனித் ராஜ்குமார் மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

appu

திரைப்படங்களில் நடிப்பதை  கடந்து பல தொண்டுகளை மக்களுக்கு செய்துள்ளார். கடந்த வருடம் இதே நாளில் உடல் பயிற்சி செய்து கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் துரதிஷ்டவசமாக  சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

appu death

இவரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. சாரை சாரையாய் பொதுமக்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலருமே இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.இந்த நிலையில் இன்றோடு அப்பு இறந்து ஓராண்டுகாலம் ஆகிறது, ரசிகர்கள் பலருமே அவரின் நல்ல குணம், பழக்கவழக்கம், தொண்டு என எல்லாவற்றையும் நினைவுக்கூர்ந்து அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

punith

புனித் ராஜ்குமாரின் கனவு படமான “கந்ததகுடி” நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this story