விஜய்68 படத்தில் இணைந்தார் புன்னகை அரசி

விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் புன்னகை அரசி நடிகை சினேகா இணைந்துள்ளார்
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
Very Happy to be associated with the most expected project ... #Thalapathy68 ...😍
— Sneha (@Actresssneha_) September 12, 2023
Thank you so much dear @vp_offl sir for this opportunity !! And sharing screen space with our one and only thalapathy will always be very very special to me ❤️❤️❤️ pic.twitter.com/8niax8SoYN
இந்நிலையில், இத்திரைப்படத்தில் புன்னகை அரசி சினேகா இணைந்துள்ளார். படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுக்கு நன்றி தெரிவித்து சினேகா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் படத்தில் சினேகா இணைந்துள்ளதை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்