பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைக்கும் புஷ்பா 2.. வசூல் குறித்த புதிய அறிவிப்பு!

pushpa 2

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுனுக்கும் தேசிய விருதையும் பெற்று தந்தது. எனவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அப்பொழுதிலிருந்தே மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 – தி ரூல் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று உலக அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது.


அந்த வகையில் அல்லு அர்ஜுன் படத்தில் தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி உள்ளார். அவருக்கு இணையாக பகத் பாஸில் தனது வில்லத்தனத்தில் தெறிக்கவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த படம் நான்கு நாட்களில் உலக அளவில் சுமார் 829 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் புஷ்பா 2 திரைப்படத்தினை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் மிகக் குறுகிய நாட்களில், அதாவது நாளையே இப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story