'புஷ்பா 2' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
‘புஷ்பா 2’ படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்த நிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீ ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்றது. விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்துகொண்டனர். டிரெய்லரில் அதிரடியான சண்டைக்காட்சிகளும் முதல் பாகத்திற்கான தொடர்புகளை நினைவுப்படுத்தும் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீ லீலா நடனமாடியுள்ள பாடலுக்கு 'கிஸ்ஸிக்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பாடல் கடந்த 24-ந் தேதி வெளியானது. கிஸ்ஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்த லிரிக் பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
𝐔/𝐀 it is!! #Pushpa2TheRuleOnDec5th pic.twitter.com/jPZuMaRK56
— Allu Arjun (@alluarjun) November 28, 2024
பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது வரை 5 கோடிக்கும் அதிகமாக பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.