வசூல் வேட்டையாடும் புஷ்பா 2 - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

pushpa 2

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார். முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. pushpa 2இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில், இப்படத்தில் 2 நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.


 

படம் வெளியாகி 2 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வரும் வார இறுதி நாட்களில் திரைப்படம் உலகளவில் 750 கோடியை நெருங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவில் வேகமாக 500 கோடி ரூபாய் வசூலித்தது இப்படமாகும்.

Share this story