புஷ்பா 2 படத்தின் Peelings பாடல் ரிலீஸ்

pushpa 2
சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். கிஸிக் பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் வெளியான லிரிக் வீடியோ பாடல்களில் 24 மணி நேரத்திற்குள் அதிகம் பார்வைகளை பெற்ற சாதனை இப்பாடல் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பீலிங்க்ஸ் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் தொடக்கத்தில் மலையாள வரிகளில் தொடங்குகிறது. இப்பாடலில் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜூன் நடனமாடியுள்ளார். 
 

Share this story