மாஸ் காட்டியதா 'புஷ்பா 2' : ரசிகர்கள் விமர்சனம் என்ன?

allu arjun

அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.  ’புஷ்பா 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று (டிச.05) பிரமாண்டமாக வெளியாகியுள்ளது ’புஷ்பா 2’. கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

சந்தன மரக் கடத்தல் மையக்கதையாக கொண்டு புஷ்பா திரைப்படம் உருவாக்கப்பட்டது. புஷ்பா முதல் பாகம் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்காக அல்லு அர்ஜூன் தேசிய விருது வென்றார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் தேசிய விருது பெற்றார். இந்நிலையில் ’புஷ்பா 2’ திரைப்படத்தில் kissik song, peelings உள்ளிட்ட பாடல்கள் படம் வெளியாகும் முன்பே நல்ல வரவேற்பை பெற்றது.



இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் இன்று மிகப்பெரிய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது. அதுவும் புஷ்பா 2 திரைப்படம் டிக்கெட் முன்பதிவிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. புஷ்பா 2 திரைப்படம் ஓடும் நேரம் 3 மணி 20 நிமிடங்கள் ஆகும். நேற்று புஷ்பா 2 சிறப்புக் காட்சியை நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தனர்.



இன்று புஷ்பா 2 திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் ஆன்லைன் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களுக்கு கமர்ஷியல் விருந்தாக இருக்கும் என விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜூன் அளவிற்கு ராஷ்மிகா மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சி.எஸ் ஆகியோரது பின்னணி இசை படத்தை மேம்பத்துவதாகவும் கூறியுள்ளனர். அதேபோல் புஷ்பா 2 கிளைமாக்ஸ் காட்சியில் அல்லு அர்ஜூனின் நடிப்பு மாஸாக உள்ளதாகவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.


மற்றோரு விமர்சனத்தில் டிரெய்லரில் வெளியான Wildfire வசனம் இடம்பெறும் காட்சி மாஸாக இருப்பதாக பதிவிட்டுள்ளனர். முதல் பாகத்தில் சமந்தா பாடல் இடம்பெற்றது போல் இப்படத்தில் ஸ்ரீலீலா நடனத்தில் kissik பாடல் இடம்பெற்றுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 

Share this story