எல்லா விஷயமும் 'புஷ்பா' இயக்குனருக்கு தெரியும: ஜானி மாஸ்டர்
பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடந்த எல்லா விஷயங்களும் 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமாருக்கு தெரியும் என்று, காவல்துறை விசாரணையின் போது, ஜானி மாஸ்டர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய திரையுலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஆன ஜானி மாஸ்டர் மீது, இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்போது, அவர் நான்கு நாள் விசாரணையில் இருக்கும் நிலையில், போலீசாரிடம், "என் மீது புகாரளித்த இளம்பெண் தானாகவே வந்து என்னிடம் வாய்ப்பு கேட்டார். அவரது திறமையை அறிந்து, நான் தான் அவரை உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டேன்.ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்யவும், மிரட்டவும் செய்தார். இதை நான் 'புஷ்பா' இயக்குனர் சுகுமாரிடம் கூறினேன், அவர் அந்த பெண்ணூக்கு அறிவுரை கூறினார். ஆனாலும் அந்த பெண் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பொய்யான புகாரை கூறியுள்ளார்.
இந்த புகாரின் பின்னணியில், எனக்கு எதிராக ஒரு சதி நடக்கிறது. என்னுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை பழிவாங்குவதற்காக இப்படி ஒரு செயலில் இறங்கியுள்ளனர்," என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.