‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு பற்றிய அட்டகாசமான அப்டேட்…..

photos

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம்புஷ்பா-தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு  குத்தாட்டம் போட்டு உலக அளவில் பிரபலமானார். இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன. பான் இந்தியா படமாக வெளியான இப்படம், அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொர்ச்சியாக  2-ம் பாகம்  தற்பொழுது உருவாகி வருகிறது.

photos

‘புஸ்பா- தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

photos

 இந்த நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அதாவது பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதியில் படத்தின் படப்பிடிப்பு இரண்டிலிருந்து- மூன்று வாரங்களுக்கு நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story