யோகிபாபு மற்றும் இயக்குனர் இளன் நடிப்பில் -பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்
நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம் தம்பதியின் மகன் இளன், வெளிநாட்டு வேலையை ரிசைன் செய்துவிட்டு ஊருக்கு வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர். தான் பார்க்க வேண்டிய பெண்ணுக்கு பதிலாக சான்வி மேக்னாவை சந்திக்கும் இளன், பிறகு அவரை காதலிக்கிறார். சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சராக அலப்பறை செய்யும் சான்வி மேக்னா, இளன் தன்னை ஆள் மாறி சந்தித்ததையே பரபரப்பு செய்தியாக்கி வீடியோ வெளியிடுகிறார்.
ஒருகட்டத்தில் இளனை திருமணம் செய்யும் அவர், மணமகன் தன் வீட்டில் குடியேற வேண்டும் என்று கடுமையான நிபந்தனை விதிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது, எதிர்பார்த்த கிளைமாக்ஸ். இயக்குனர் இளன், ஸ்கிரிப்ட் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார். அவருடைய அப்பாவித்தனமான நடிப்பும், பேச்சும் ரசிக்க வைக்கிறது.
சான்வி மேக்னாவுக்கும், அவருக்குமான நெருக்கமான காட்சிகள், ஜென்-ஸி ரசிகர்களுக்கு போனஸ். அவரது அப்பா, அம்மாவாக இளங்கோ குமரவேல், ராதிகா மற்றும் தாத்தா செந்தில் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம் ஜோடி கச்சிதம். இறுதியில் யோகி பாபு, தனது மனைவியின் அருமையை நினைத்து கண்கலங்குவது உருக வைக்கிறது.

