காதலர் குறித்த கேள்வி.. நச்சுனு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா..!

rashmika

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, நடித்து ஹிட்டான படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்த இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. டிச. 5-ல் வெளியாக இருக்கும் இதன் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.rashmika

இந்நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிடம், “உங்களின் வருங்கால கணவர் திரைத்துறையைச் சேர்ந்தவரா, வெளியிலிருந்து வரப் போகிறாரா?’ என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ராஷ்மிகா, “இதற்கான பதில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்” என்றார். நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் ராஷ்மிகா முதன் முறையாக, விஜய் தேவரகொண்டாவின் பெயரைக் குறிப்பிடாமல் ஒப்புக்கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி இருக்கிறது.

Share this story