ஓடிடி.,யில் வெளியான ஆர்.கே.சுரேஷின் "காடுவெட்டி" நடுநாட்டுக்கதை
1721663833437

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் சோலை ஆறுமுகம் இணை தயாரிப்பாளராக இருந்து இயக்கி, மார்ச் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் காடுவெட்டி நடுநாட்டுக்கதை.
மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், "காடுவெட்டி" நடுநாட்டுக்கதை திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.