பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி காலமானார்.

photo

பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி உடல்நல குறைவு காரணமாக காலமானார், அவருக்கு வயது 87.

photo

அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர். சுப்புலட்சுமி, விளம்பர படங்களில் நடித்து பின்னர் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த நந்தனம் படத்தின் மூலமாக சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மட்டுமல்லாது பாடகி, இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஆர். சுப்புலட்சுமி. கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டுவந்த இவர் கொச்சியில் நேற்று காலமார். தொடர்ந்து திரைத்துறையை சார்ந்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுப்புலட்சுமி விண்ணைத்தாண்டி வருவாயா, பீஸ்ட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story