புதிய விருது வாங்கியுள்ள ராஷி கண்ணா!

ச்

புதிய விருது வாங்கியுள்ள நடிகை ராஷி கண்ணா, அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் தமிழுக்கு அற்முகமானவர் ராஷி கண்ணா. பின்பு தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம் என பல்வேறு நடித்து பிரபலமானார். கடைசியாக சுந்தர்-சியின் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மெட்ராஸ் கஃபே முதல் தி சபர்மதி ரிப்போர்ட் வரை, எனது திரைப்பயணம் வளமானதாக இருந்துள்ளது. பலதரப்பட்ட கதாபாத்திரங்களை நடித்ததற்காக கௌரவிக்கப்படுவது சிறப்பானது. எனக்கு Sensational Performer விருது வழங்கிய நெக்ஸ் பிரான்ட் நிறுவனத்திற்கு எனது நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு, 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

Share this story