‘இராவண கோட்டம்’ திரைப்படத்தின், ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீடு.

photo

2013ஆம் அண்டு வெளியான ‘மதயானை கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு சுகுமார் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகியுள்ள திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இந்த படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்க, கயல் ஆனந்தி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  இவர்களுடன்  பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

photo

 நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து, பல தடைகளை கடந்து படம் ரிலீஸ்ஸிற்கு தயாராகியுள்ளது. இந்த  நிலையில் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் லிரிக்கள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  இந்த பாடலை யாசின் நிசார் மற்றும் வந்தனா சீனிவாசன் இணைந்து பாடியுள்ளனர். “அத்தன பேர் மத்தியில’ என தொடங்கும் இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.

 photo

கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றது   குறிப்பிடத்தக்கது.

Share this story