சாந்தனு - பிரபு இணைந்து நடித்துள்ள 'இராவண கோட்டம்'... ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு !
சாந்தனு மற்றும் பிரபு இணைந்து நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் சாந்தனு. 'முருங்கைக்காய் சிப்ஸ்', 'வானம் கொட்டட்டும்', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் தற்போது சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'இராவண கோட்டம்'.
'மதயானைக் கூட்டம்' படம் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல்முறைகளை அழுத்தமாக பதிவு செய்த அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்திலும், 'கயல்' ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ள இப்படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.