ஓடிடியில் வெளியாகும் ‘இராவணக்கோட்டம்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

RaavanaKottam

சாந்தனுவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘இராவணக்கோட்டம்’ படத்தின் ஓடிடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இளம் நடிகரான சாந்தனுவின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘இராவணகோட்டம்’. இந்த படத்தை  'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் பிரபலமான விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.  கேஆர்ஜி குரூப்ஸ் ஆப் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

RaavanaKottam

இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

கருவேலங்காட்டு அரசியல் குறித்து பேசியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடித்தளத்தில் வெளியாகவுள்ளது. 

Share this story