சாதனை மேல் சாதனை படைக்கும் ராயன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்
நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் திரைக்கதையை லைப்ரரி ஆஃப் தி அகாடெமி ஆஃப் மோஷன் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ச்- இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ராயன் திரைப்படத்திற்கு தான் அதிகம். தனுஷ்நடித்த படங்களிலே ராயன் தான் அதிகம் வசூலித்த படமாகும். 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் தான் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்கெல்லாம் நன்றி தெரிவித்து படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சரஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். படம் அதன் இரண்டாம் வாரத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது. மக்களின் ஆதரவு இன்னும் அதிகமாகதான் ராயன் திரைப்படத்திற்கு உள்ளது . ராயன் திரைப்படம் இதுவரை 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தணிக்கை குழு சார்பில் ஏ சான்றிதழ் கொடுத்தும் இந்தளவு வசூலித்தது மிகப் பெரிய விஷயமாகும்.
#Raayan creating Box Office records ! 💥#Raayan ranagalam everywhere 🔥#RaayanMegaBlockbuster in cinemas near you! @dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop… pic.twitter.com/PQwuYFWC5e
— Sun Pictures (@sunpictures) August 4, 2024