வசூலில் பட்டையை கிளப்பும் நடிகர் தனுஷின் ராயன்
1722070153538

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய படம் ராயன். தனுஷின் 50வைத்து படமான ராயன், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்கள் படத்தை ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர். தனுஷ் நடிப்பு மட்டுமின்றி ரகுமான் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இந்நிலையில், நேற்று வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 17.5 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 10.2 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். முதல் நாள் இதற்கு முன் பெரிய ஓபனிங் பெற்ற படம் என்றால் பில்லா 2 படம் தானாம், அப்படம் முதல் நாளில் ரூ. 10.1 கோடி வரை வசூலித்திருக்கிறது.