ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் வெளியானது

water packet


நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் தான் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது. ராயன் திரைப்படம் இதுவரை 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.தனுஷ் நடித்த படங்களிலே ராயன் தான் அதிகம் வசூலித்த படமாகும்.இந்நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் பாக்கெட் வீடியோ பாடலை ராயன் படக்குழு வெளியிட்டுள்ளது.


 

Share this story