"படப்பிடிப்பில் திரைக்கு முன்பும், பின்பும் சரிசமமாக பெண்கள் பணியாற்றினர்"-ராதிகா ஆப்தே

radhika-apte-33

படப்பிடிப்பு தளங்களில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு இடையே அடிக்கடி ‘ஈகோ’ மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ என்ற கிரைம் வெப்தொடரின் வெளியீட்டை முன்னிட்டு ராதிகா ஆப்தே பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், ‘படப்பிடிப்பு தளங்களில் பெண்கள் மோதிக்கொள்கிறார்கள் என்பது மிகவும் பழமையான சிந்தனை. நீண்ட நாட்களாக இந்த கேள்வியை நான் கேட்கவில்லை.
ஏனெனில், அது உண்மை இல்லை. பெண்களை விட ஆண்கள்தான் அதிக பாதுகாப்பற்ற உணர்வுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். இது ஆணா அல்லது பெண்ணா என்பது பற்றியது அல்ல. மனிதர்களின் புரிதல் மற்றும் நட்புறவை சார்ந்தது. அனைவரிடமும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட முடியாது. தொழில்முறையில் ஒருவருக்கு ஒருவர் கண்ணியமாக பழக முடியும். எங்கள் படப்பிடிப்பில் திரைக்கு முன்பும், பின்பும் சரிசமமாக பெண்கள் பணியாற்றினர். இதனால், அங்கு அழகான சகோதரத்துவ சூழ்நிலை ஏற்பட்டது’ என்றார்.

Share this story