ராதிகா முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’.-இதன் கதை என்ன தெரியுமா ?

radhika

இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரி தோ.சமயமுரளி எழுதி இயக்கி பின்னணி இசை அமைத்த படம், ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’. இதிலிருந்து வெளியாகியுள்ள ‘தாமரை’, ‘தங்கம் தங்கம்’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்துள்ளது. வரும் 30ம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தில்   ஜே.டி.சக்ரவர்த்தி, லால், சரண் சக்தி, பாலசரவணன், ஸ்மேஹா, ராதிகா, காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி நடித்துள்ளனர்.

எஸ்.ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ராம் பிரகாஷ் தயாரித்துள்ள‌ார். படம் குறித்து தோ.சமயமுரளி கூறியதாவது: 2008ல் இந்திய வருவாய் பணி அலுவலர்கள் பிரிவில், சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு துறைகளில் பணியாற்றினேன். நான் விசாரித்த சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாக கொண்ட படம் இது. கடத்தல், நிழல் உலகம், சுங்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு சொல்வதுடன், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளில் சுங்கத்துறை வகிக்கும் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

Share this story