விஜய் சேதுபதி படத்தில் நடிகை ராதிகா ஆப்தே..?

vjs

நடிகை விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகை ராதிகா ஆப்தே உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தேவிடம் இயக்குனர் பூரி ஜெகன்நாத் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்யும் ராதிகா ஆப்தே, இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

vjs
நடிகை ராதிகா ஆப்தே ’தோனி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ’வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், ’கபாலி’ படத்தில் நடித்த குமுதவல்லி கேரக்டர் தான் அவருக்கு மிகப்பெரிய பெயர் பெற்றுத் தந்தது. அதன் பிறகு ’சித்திரம் பேசுதடி 2’, ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ போன்ற படங்களில் நடித்த நிலையில் தற்போது மீண்டும்  விஜய் சேதுபதி படத்தின் மூலம் தமிழுக்கு ரீ என்ட்ரி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story