ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு தளத்தில் ராதிகா - கீர்த்தி சுரேஷ்

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு தளத்தில் ராதிகா - கீர்த்தி சுரேஷ்

தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழில்  உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார். . நடப்பு ஆண்டில் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் 5 படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. ஜெயம்ரவியுடன் அவர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைரன். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வௌியாகிறது. அடுத்து ரகு தாத்தா, ரிவால்வர் ரீடா, கன்னி வெடி ஆகிய படங்கள் வெளியாகின்றன.

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு தளத்தில் ராதிகா - கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் சந்துரு  ரிவால்வர் ரீடா படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தினேஷ் கிருஷ்ணன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் உள்பட பலர் உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Share this story