விராட் கோலியை சந்தித்த ராதிகா சரத்குமார்

radhika

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள ராதிகா சரத் குமார், பிரெஞ்ச் மொழியில் நடித்திருக்கும் திரைப்படம் ‘லிட்டில் ஜாஃப்னா’ (Little Jaffna). லாரன்ஸ் வாலின் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் வேல ராமமூர்த்தி, புவிராஜ் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்கள் பிரிவின் முடிப்புத் திரைப்படமாக திரையிடப்பட்டது. அதைக்கான படக்குழுவுடன் ராதிகா சரத்குமார் வெனிஸ் சென்றிருந்தார். திரைபடவிழாவில் பங்கேற்ற பிறகு விமானத்தில் சென்னைக்கு திரும்பியுள்ளார். 

விமான பயனத்தின்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்து அவருடன் செல்ஃபி எடுத்துள்ளார். இது தொடர்பான ராதிகா சரத்குமாரின் எக்ஸ் தள பதிவில், “இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில்தான் விளையாடவுள்ளேன் என்றார், அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்ஃபிக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நேற்று ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story