“படப்பிடிப்புத் தளத்தில் இறுக்கமான ஆடைகளை அணியுமாறு டார்ச்சர்”- தயாரிப்பாளர் மீது ராதிகா ஆப்தே புகார்
கர்ப்பமாக இருந்தபோது நடந்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே இன்ஸ்டாவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் கடந்த ஆண்டு தான் கர்ப்பம் ஆனார். இது குறித்து அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்தபோது நடந்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே இன்ஸ்டா நேரலையில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், “நான் பணியாற்றிய ஒரு இந்திய தயாரிப்பாளர் எனது கர்ப்பம் குறித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடையவில்லை. நான் கர்ப்பமாக இருந்தபோது படப்பிடிப்புத் தளத்தில் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என ஒரு தயாரிப்பாளர் வலியுறுத்தினார். வலி மற்றும் அசௌகரியமான சூழல் ஏற்பட்டபோதும் மருத்துவரை பார்க்க அனுமதிக்கவில்லை. ஹாலிவுட்டில் இப்படி இல்லை. அங்கு அனைவரும் ஆதரவாக இருப்பார்கள்.
நான் முதல் மூன்று வாரங்களில் இருந்தபோது தொடர்ந்து பசியுடன் இருந்தேன். அதனால் அதிகமாக உணவுகள் எடுத்துக்கொண்டு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. இவற்றை புரிந்து கொள்வதற்கு பதிலாக உணர்ச்சியற்ற மனப்பான்மை எதிர்க்கொண்டேன். ” எனக் கூறியுள்ளார்.

