ப்பா….. என்னா…..மனுஷய்யா இவரு!– ‘ருத்ரன்’ பட இசை வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்த ‘ராகவா லாரன்ஸ்’.

photo

ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ பட இசைவெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

photo

 நடன இயக்குநராக பிரபலமான  ராகவா லாரன்ஸ், பலரையும் தனது மாஸ்டர் பீஸ் ஸ்டெப்புகளால் ஆட வைத்தார். தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுத்து, முனி, காஞ்சனா, காஞ்சனா 2  உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாது நடித்தும் இருந்தார். இதனை தொடர்ந்து  தற்போது ‘ருத்ரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

photo

 ருத்ரன் படம் வருகிற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன் சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக  நடைபெற்றது

அந்த விழாவில்,150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான கல்விச் செலவை அவரே ஏற்றுள்ளார். இந்த தகவலை தனது சமூகவலைதள பக்கத்தின் மூலமாக பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த குழந்தைகளுக்கு அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த செயலை கண்டு பலரும் நெகிழ்ந்து அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share this story