‘லோகேஷ் கனகராஜ்’ கதையில் – ‘ராகவா லாரன்ஸ்’, ‘நயன்’ கூட்டணி வெளியான சூப்பர் தகவல்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ராகவா லாரன்ஸ் முதல் முறையாக கூட்டணி அமைக்க இருக்கும் படத்தின் கதையை சூப்பர் ஹிட் இயக்குநர் லேகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார்.
தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குநர் லோகேஷ், தற்போது தனது நண்பரான மேயாத மான் ,ஆடை போன்ற படங்களின் இயக்குநரும், மாஸ்டர் படத்தில் லோகேஷ் உடன் இணைந்து திரைக்கதை எழுதியவரான ரத்தின குமாருக்காக ஒரு புதிய படத்திற்காக கதை மற்றும் திரைக்கதை எழுதி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த படத்தை தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார் லோகேஷ். நயன் மற்றும் ராகவா லாரன்ஸ் முதல் முறையாக ஜோடிசேர உள்ளதாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதையை லோகேஷ் எழுதி உள்ளதாலும் படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
கூடுதல் தகவலாக படத்திற்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமானிடம் இசையமைக்க இருக்கிறாராம், மேலும் இந்த படத்தை பிரம்மாண்டமான முறையில் அமைக்க திட்டம் தீட்டி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த சூப்பர் ஹிட் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.