‘பேய் பட இமேஜ் மாறும்…’- ராகவா லாரன்ஸ் பேச்சு.

photo

தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் குறித்து அதன் ஹீரோ ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.

photo

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.  இந்தப்படம் நாளை தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படம் குறித்து ராகவா லாரன்ஸ் கூறும் போது படம் பழங்குடியின பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாகவும். ஒரு ரவுடி, சினிமாவுக்குள் வரும் போது என்ன நடக்கும் என்பதை அழகாகவும், அழுத்தமாகவும், வலி நிறைந்ததாகவும் படத்தில் சொல்லப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய லாரன்ஸ் க்ளைமேக்ஸில் வரும் 20 நிமிடங்கள் வேற வேறலெவலில் இருக்கும் என்றும், நல்ல படம் பார்த்த திருப்தியிய படம் கொடுக்கும் அதுமட்டுமல்லாமல் இந்த படம் பேய் பட இமேஜை உடைக்கும் என பேசியுள்ளார்.

Share this story