தலைவர் 171 அப்டேட்: ரஜினிக்கு வில்லனா ராகவா லாரன்ஸ்?

photo

ரஜினிகாந்தின் 171வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

ரஜினிகாந்த் அவரது 171வது படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்துள்ளார். அந்த படத்தை சன்பிசர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர். அனிரூத் இசையமைக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியது.  இந்த நிலையில் படத்தில் ரஜினிக்கு முக்கிய வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், ரஜினியின் தீவிர பக்தர் என்பது நாம் அறிந்த ஒன்று, மேலும் அவர் ரஜினியுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story