தமிழ் புத்தாண்டில் வெளியாகும் 'ருத்ரன்'... ராகவா லாரன்ஸ் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு !

rudhran

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 'ருத்ரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல தயாரிப்பாளரான பைவ்  ஸ்டார் கதிரேசன் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனார் நடித்துள்ளார். மிரட்டும் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இப்படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.

rudhran 

இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

கடந்தாண்டே அனைத்து பணியிலும் முடிக்கப்பட்ட இப்படம் ரிலீசாகாமல் இருந்தது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு போஸ்டராக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story