‘ருத்ரன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்:

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில், 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனர் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து தற்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ருத்ரன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் மாஸ்ட்டருக்கே உரிய ஸ்டைலில் ஆக்க்ஷன் அதிரடி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் ஹய்லைட்டாக “ EVIL IS NOT BORN, IT’S CREATED” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.