ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ மாஸ் அப்டேட்.. படக்குழு அறிவிப்பு !

Rudhran

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படத்தின் மாஸ் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ராகவா லாரன்ஸ். தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் ‘ருத்ரன்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தை ‘பொல்லாதவன்',  'ஜிகர்த்ண்டா' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கயுள்ளார்.

Rudhran

இயக்குனர் கே.பி.திருமாறன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது.  

ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் வரும் கிறிஸ்துமசையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 4.15 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story

News Hub