விஷால் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்... புதிய படத்தின் அப்டேட் !

raghava Lawrence

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல நடன இயக்குனராக ராகவா லாரன்ஸ், தற்போது முழு நேர நடிகராக மாறி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து பி வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ‘அதிகாரம்’, ‘ஜிகர்தாண்டா 2’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். 

raghava Lawrence

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘அயோக்யா’ படத்தை இயக்கிய வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

raghava Lawrence

கடந்த 2019-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் 'அயோக்யா'. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த 'டேம்பர்' படத்தின் ரீமேக்காக படத்தின் இப்படம் உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story