LCU-ல் ராகவா லாரன்ஸ்?.. ‘பென்ஸ்’ அறிவிப்பு டீசர் ரிலீஸ்..

Lawrence

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக ‘ஃபைட் கிளப்’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் அடுத்த தயாரிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் கதை எழுத, ‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களைய் இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ராகவா லாரன்ஸின் பிறந்தநாளையொட்டி இதன் அறிவிப்பு டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

 



அதில் தலையில் சிவப்பு ஹெல்மெட்டுடன் திரையில் தோன்றும் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்கிறார். இதன் மூலம் லோகேஷின் எல்சியுவில் ஏற்கெனவே இருக்கும் கைதி டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த பென்ஸ் கதாபாத்திரமும் இணையும் என்று தெரிகிறது. எல்சியுவில் இடம்பெறும் போதைப் பொருள் ஒழிப்பு, மாஃபியா போன்ற கதைக்களமே இந்த படமும் என்பதை வீடியோவின் மூலம் கணிக்க முடிகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தை ஜி ஸ்குவாட் உடன் இணைந்து பேஸன் ஸ்டூடியோஸ், தி ரூட் உள்ளிட்ட நிறுவனங்களும் தயாரிக்கின்றன.

Share this story