ராகவா லாரன்ஸ் படத்தில் இணைந்த 'ஜெயிலர்' நடிகர்... 'புல்லட்' படத்தின் புதிய அப்டேட்

bullet

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 'புல்லட்' படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘அருள்நிதி’ நடிப்பில் வெளியான ‘டைரி’ படத்தின் பிரபலமானவர் இன்னாசி பாண்டியன். தற்போது அவர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எல்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் தனது தம்பி எல்வினுடன் இணைந்து நடிகர் ராகவா லாரன்ஸும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

bullet

இந்த படத்தில் தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். பைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனம் சார்பில் எஸ் கதிரேசன் இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

bullet

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். 'புஷ்பா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுனில். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்திலும் கலகலக்கலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர விஷாலின் 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story