ஜிகர்தண்டா படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குநராகவும் வலம் வரும் முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கிய இப்படத்தில் ராதிகா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இத்திரைப்படம், தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது
இந்நிலையில், இன்று ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜிகர்தண்டா படக்குழுவினருடன் சேர்ந்து அவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
#JigarthandaDoubleX - Raghava Lawrence Birthday Celebration... Team In Dubai, A Big Event Set To Take Place This Evening. #DoubleXDiwali pic.twitter.com/s8l9jPnAn8
— Trendswood (@Trendswoodcom) October 29, 2023