பண்டிகை தினத்தில் வெளியாகும் 'சந்திரமுகி 2'.... இறுதிக்கட்டத்தில் பணிகள் !

chandramuki 2

 ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சந்திரமுகி 2' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று 'சந்திரமுகி'. தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் 18 ஆண்டு கழித்து  உருவாகி வருகிறது. பிரபல நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்தை முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். 

chandramuki 2

இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

chandramuki 2

இந்த படத்தில் படப்பிடிப்பு பலகட்டங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் மைசூர் அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  வரும் மே 17ஆம் தேதி முதல் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

 

 

 

Share this story