வெளியீட்டிற்கு தயாராகும் 'சந்திரமுகி 2'.. விரைவில் வெளியாகும் முக்கிய அப்டேட்

chandramuki 2

 ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் 'சந்திரமுகி 2' படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது ‘சந்திரமுகி 2’. சூப்பர் ஸ்டார் நடித்த கெட்டப்பிலேயே நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடித்துள்ளார். முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கி வரும் இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். 

chandramuki

இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

chandramuki

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனது பகுதி டப்பிங்கை நடிகர் ராகவா லாரன்ஸ் முடித்துவிட்டார். இதையடுத்து அடுத்தக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாத இறுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இதற்கிடையே இப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Share this story