பாட்ஷாவை விட இரு மடங்கு ஹிட்டடிக்கும் - ‘ஜெயிலர்’ ஷோகேஸை பார்த்து சிலாகித்த லாரன்ஸ் !
‘ஜெயிலர்’ படத்தின் ஷோகேஸை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் சிலாகித்து ட்வீட் செய்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டிரெலய்லர் ஷோகேஸ் என்ற பெயரில் இன்று மாலை வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் லுக்கில் கலக்கலாக உள்ளார். பூனை போன்று சாந்தமாக முதலில் இருந்த ரஜினி, அதன்பிறகு புலியாக மாறி அடித்து துவம்சம் செய்கிறார். ஒரு லெவலுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சுதான் என ரஜினி பேசும் டயலாக் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் ஷோகேஸை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதை பார்த்து ரஜினி ரசிகராக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு பிடித்த படங்களில் ஒன்றான பாட்ஷா ஏற்படுத்திய அதே உற்சாகம் இந்த படத்திலும் உள்ளது. பாட்ஷா படத்தை விட டபுள் ஹிட்டாகும். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியை இப்படி காட்டியதற்கு நெல்சன், சன் பிக்சர்ஸ், அனிரூத் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.