ராகவா லாரன்ஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு 1 கோடி நிதி.. லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் அதிரடி !

ராகவா லாரன்ஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’. இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் பி.வாசு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸின் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தயாரிப்பாளர் சுபாஸ்கரன் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.