விஜயகாந்த் மகனுடன் இணைந்து நடிக்க ரெடி - ராகவா லாரன்ஸ்

விஜயகாந்த் மகனுடன் இணைந்து நடிக்க ரெடி - ராகவா லாரன்ஸ் 

மறைந்த நடிகர் தே.மு.தி.க தலைவர் புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு கடந்த திங்கள் கிழமையைன்று நேரில் சென்று ராகவா லாரன்ஸ் அஞ்சலி  செலுத்தினார். தொடர்ந்து, கேப்டன் இல்லத்திற்கு  சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல்  தெரிவித்தார். அவருடன் அவரது தாயாரும் உடன் சென்றனர். அப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து கொண்டிருப்பது பற்றி அவரிடம் கூறியுள்ளனர். 


இது தொடர்பாக வீடியோ பகிர்ந்த ராகவா, அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. விஜய்காந்த சார் திரையுலகிற்கு செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார். அவர் நடித்த கண்ணுபடப் போகுதையா படத்தில் மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு நான் கோரியோகிராபி செய்திருக்கிறேன் ரொம்பவும் அழகான நடனமாடினார்.  அதனால், சண்முக பாண்டியன் படம் வெளியாகும்போது அதனை பிரபலப்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி படக்குழு ஒப்புக்கொண்டால் அவரது படத்தில் நான் கேமியோ ரோல் செய்யவும் தயார் எனவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

Share this story